ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை கொழும்பு மேல்நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  2010 – 2014 வரையான காலப்பகுதிகளில் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153  ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக கூறி  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.