தங்காலை, உனகுருவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் அடங்கிய குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (18) மாலை 6.55 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உனகுருவே சாந்தாவின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சீனிமோதரையில் கைவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




