நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார்.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் இணைந்து பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி, இந்த பொது வேட்பாளரை களமிறக்குகின்றன.
அந்தவகையில், தமிழ் பொது வேட்பாளர் ப.அஅரியநேத்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக தமிழ் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.