தலங்கமவில் வீதியால் பயணித்த பொதுமக்கள் மீது வாளால் தாக்குதல் !

வாளுடன் வீதிக்குச் சென்ற நபரொருவர் வீதியில் பயணித்த பொதுமக்களை தாக்கிய சம்பவம் தலங்கமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இவர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் இதன்போது வீதியிலிருந்த 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.