திடீரென கடமையிலிருந்து விலகிய காவல் துறை அதிகாரி தொடர்பில் விசாரணை

தம்புத்தேகம தலைமையக காவல் துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் கடந்த மூன்று நாட்களாக கடமைக்கு சமுகமளிக்காமல் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் தொடர்ந்து கடமையாற்ற சிரமமாக இருப்பதாக காவல் துறை நிலையத்தில் உள்ள புத்தகம் ஒன்றில் எழுதி வைத்துவிட்டு யாரிடமும் கூறாமல் காவல் துறை நிலையத்தை விட்டு வெளியே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் துறை அதிகாரியைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் வெலிக்கடை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டு கோட்டை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் பின்னர் தம்புத்தேகம தலைமையக காவல் துறை நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.