திருகோணமலையில் யானை உயிரிழப்பு

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறி மங்களபுர பகுதியிலுள்ள வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளது.

இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (30)   உயிரிழந்திருக்கலாமெனவும் உயிரிழந்த யானையின் தோல் பகுதியில் காயமொன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேருநுவர வனஜீவராசிகள் அதிகாரிகளால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது .