திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி நின்றவரும் இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்கான அயராது உழைத்து வந்தவருமான  மாண்புமிகு இரா. சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம்.

ஐயாவின்  பிரிவால் வாடும் அவரது மனைவி , மக்கள், மருமகள் ,பேரன் உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில்    இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக்  கொள்கின்றோம்  என மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசுக் கடசியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது.

இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது 16170 அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என அரசியல் கள நிலவரம் ஊடாக அறிய முடிகிறது.

காலம் சென்ற இரா. சம்மந்தனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து திருகோணமலையில் இன்று (01)மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.