தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அம்பாந்தோட்டை – மத்தள வீதியில் 1.9 கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்த காட்டு யானை அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தை மோதி சேதப்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானை அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளது.




