தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து

தெற்கு அதிவேக வீதியில் இன்று வியாழக்கிழமை (05) பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 95ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.