தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் கொள்ளை !

கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹப்புவலான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத இருவர் அங்கிருந்த தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொள்ளையிட்ட பணத்தின் மொத்த பெறுமதி 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்