தொட்டிலில் குழந்தை உறக்கத்திலிருந்தவேளை திடீரென தீப்பற்றிய வீடு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நண்பகல் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்து எரிந்துள்ளது.

சமையலில் ஈடுபட்டவர் குடும்பப்பெண் மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததை அவதானித்து ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கியுள்ளார்.

இதன்பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற போதும் வீடு முற்றாக எரித்து நாசமாகியுள்ளது .

இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், கையடக்கத்தொலைபேசி, 2  மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது இடமின்றி அயலவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவிக்கையில்,

தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில்  இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. எமக்கு இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும் தற்பொழுது அதுவும்  தீயில் எரிந்து இல்லாமல் போய் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.