நல்லூரிலிருந்து கதிர்காமத்துக்கான தரிசன யாத்திரை ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தனின் ஜப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் உருவாக  இறையருள் வேண்டி இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினரின் ஏற்பாட்டில் புனித திருத்தல தரிசன யாத்திரை இன்று சனிக்கிழமை(28.10.20223) காலை-07.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கித் தரிசன யாத்திரை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த தரிசன யாத்திரையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தரிசன யாத்திரை 30 ஆம் திகதி திங்கட்கிழமை கதிர்காமத்தைச் சென்றடையுமென தரிசன யாத்திரை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.