தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாவது நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) காலை-09 மணியளவில் யாழ் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது இரண்டு மாவீரர்களின் தாயாரான மலர் ராணி பொதுச் சுடரேற்றி அஞ்சலித்தார். ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து திலீபனின் உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியிலும் திலீபனின் உருவப்படம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.






