நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மதுரங்குளி, கரிகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த தனியார் பஸ் முந்தல் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றதாகவும் முச்சக்கரவண்டி சாரதி பின்பக்கமாக வந்து பஸ்ஸில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.