நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்

தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநிதிகளை  உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும்  போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

செம்மணியில்  திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம்.தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிதிகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது.

இது மக்களின் மனங்களில்  அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும்  நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும்.

உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு  அலைந்து கொட்டிருக்கிறார்கள்.

ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  பல அப்பாவி மக்களது  மனித எலும்புக்கூடுகள் ,எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு  மிகவும் முக்கியமானதாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யூத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது  என்று தேடுகின்ற , கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை ,கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது  இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும்.

இனிமேலும்  தாமதிக்க கூடாது  நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார்.