நீராவியடியில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு

சைவபரிபாலன சபையின் ஒழுங்கமைப்பில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (11.08.2024) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள சைவபரிபாலன சபையின் ஆச்சிரம மண்டபத்தில் சைவபரிபாலன சபையின் தலைவர் உ.தயானந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.இந்துமகளிர் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டார். விசேட குருபூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சிவஸ்ரீ தி.மயூரகிரிக் குருக்கள் ஆசி உரை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் கலந்து கொண்டு சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.