பசறையில் வீட்டிற்குள் மர்மமான முறையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

பதுளை, பசறை, 10வது கனவா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பசறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இறந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.