பமுனுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்தியவத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவரகொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்த 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





