பருத்தித்துறையிலிருந்து மாதகல் வரை நீண்ட விழிப்புணர்வு நடைபயணம்

“நீலப் பொருளாதாரம்” (BLUE ECONOMY) எனும் கருப்பொருளை முன்வைத்து பருத்தித்துறையில் தொடங்கி மாதகல் வரை நீலக் கடற்கரை ஓரமாக ஈ குருவி நிறுவனமும், புதிய வெளிச்சம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நீண்ட விழிப்புணர்வு நடைபயணம் நாளை திங்கட்கிழமை (17.06.2024) அதிகாலை-05.20 மணியளவில் பருத்தித்துறை வெளிச்ச வீட்டிலிருந்து ஆரம்பமாகிறது.

இந்த விழிப்புணர்வு  நடைபயணத்தில் பங்குபற்றுபவர்களுக்கு வல்வெட்டித்துறையில் காலை உணவும், நகுலேஸ்வரத்தில் மதிய உணவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை-05.20 மணியளவில் மாதகல் சிவன் ஆலயத்தடியைச் சென்றடைந்து விழிப்புணர்வு நடைபயணம் நிறைவுக்கு வரும்.

இதேவேளை, குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.