பருத்தித்துறை – டிக்வெல்ல வரையான சைக்கிள் பயணம் பருத்தித்துறையில் ஆரம்பம்!

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியாக சர்வதேச சுற்றுலாக்களை ஈர்க்கும் வகையில் பருத்தித்துறை முதல் டிக்வெல்ல வரையிலான சைக்கிள் பயணம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நள்ளிரவு 12 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

36 மணித்தியாலங்களில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் மூலம் கடக்க தீர்மானித்து, இந்த பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.

வடமராட்சி – பருத்தித்துறை, சற்கோட்டை முனை பகுதியில் இருந்து இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட  இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மாத்தறை மாவட்டம் – டிக்வெல்ல முனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  (31) நள்ளிரவு 12.00 மணிக்கு சென்றடையும்.

தென்னிந்திய சுற்றுலாத்துறை அமைச்சின் இளைஞர்கள், சுற்றுலாவில் பங்கெடுக்க வந்த இளைஞர்கள், சர்வதேச சைக்கிள் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட 65 சைக்கிள் ஓட்ட வீரர்கள் இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.