பலவந்தமாக உடல்களை தகனம் செய்தமை தொடர்பில் கருத்து தெரிவித்தமைக்காக கைது

கொரோனா பெருந்தொற்றுகாலத்தில் பலவந்தமாக உடல்களை தகனம் செய்தமை தொடர்பில் தான் தெரிவித்த கருத்திற்காக தான் 2020 கைதுசெய்தமை தொடர்பில் இலங்கையின் அரசபுலனாய்வு பிரிவி;ற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் சிரந்த அமெரசிங்க  முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அரசபுலனாய்வு பிரிவிற்கு எதிராக பொலிஸ்தலைமையகத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் நீரில் பரவாது எனதான் தெரிவித்த கருத்திற்காக  அரசபுலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் தன்னை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர் என மனித உரிமை செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூட சுமத்தால் சிஐடியினர் அவ்வேளை தன்னை கைதுசெய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் சனல் 4இன் விவரணச்சித்திரத்திற்கு தெரிவித்த கருத்திற்காகவும் கைதுசெய்யப்பட்டதாக சிரெந்த அமெரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசபுலனாய்வு பிரிவின் தலைவரும் அதிகாரிகளும் கரிசனையளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் பொலிஸ்மா அதிபர் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.