பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் 75 நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு !

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த 75 நாட்களாக இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.