பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஹெரோயினுடன் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை – பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.