அநுராதபுரம் நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மாணவன் ஒருவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.