பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, இவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவர் “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய உதவியாளர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.