ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்து செய்தியுடன் சிறிலங்காவுக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ் ஜகார்யன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பையும் ரஸ்ய தூதுவர் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
உக்ரைன் மோதல் தொடர்பில் ரஸ்யாவின் நிலைப்பாட்டை தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.