இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய சிறீலங்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் சார்பில் புதுடில்லி சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை (29.08.2025) புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்திப்பும், இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சந்திப்பையும், இராப் போசனத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் புறக்கணித்துள்ளனர்.





