புழுக்கள், பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகளை விற்பனை செய்த நபருக்கு அபராதம்

புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகளை விற்பனை செய்த நபருக்கு பதுளை நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

காளான்களை பொதி செய்து விற்பனை செய்யும் உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்திச் செல்லும் பதுளை ஹேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் காரியாலயத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பதுளை பிரதேசத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய சுமார் 4 கிலோ 960 கிராம் நிறையுடைய களான் பொதிகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்லும் நபர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அந்நபருக்கு எதிராக நீதிமன்றினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.