போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !

மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 100 போதைமாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிகொலால மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொழும்பில் இருந்து  போதைப்பொருளை கொண்டு வந்து  மஹியங்கனை பகுதிகளில் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள், போதை மாத்திரை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.