ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உத்தியோகபூர்வ சேவைகள் என்ற பெயரில் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேகரிக்கும் இணையத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக SLCERT சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
“போலி இணையதளம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஒத்திருந்தது. இது தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பொதுத்துறை காலியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக விளம்பரப்படுத்தியதுடன் புதிய விண்ணப்பங்களை இலவசமாக ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
“உள்நுழைவுக்குப் பிறகு, தனிப்பட்ட தகவலுடன் ஒரு கேள்வித்தாளை நிரப்ப விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுகின்றனர். முடிவில், பல வட்ஸ்அப் குழுக்களில் இறுதி இணைப்பைப் பகிருமாறும் அதில் தெரிவிக்கப்படுகிறது”என்று அவர் மேலும் கூறினார்.
முறைப்பாடுகளை பெற்ற தேர்தல் ஆணைக்குழு, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முறைப்படுகளினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவர் SLCERTயிடம் முறைப்பாடு செய்ததாகவும் தமுனுபொல தெரிவித்தார்.
குறித்த இணையதளத்தை முடக்க SLCERT உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், சமூக ஊடக குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலி அழைப்பு இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தமுனுபொல பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட தொடர்புத் தகவல் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க நிறுவனங்கள் மூலம் விவரங்களை சரிபார்க்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.