போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் தெமட்டகொடை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலுவான பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அக்குரஸ்ஸ, ஹேனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 62 நாணயத்தாள்கள் மீகைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.