மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி, வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டமுடன் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் மரநடுகையும் நடைபெற்றது.