மட்டக்களப்பு தேற்றாத்தீவில் வாகன விபத்து : இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இடம்பெற்ற வாகன விபத்து இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி  நோக்கி பயணித்த இரு மோட்டார் வண்டிகளும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.