மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை அவரைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதிவிஷேச வகை மதுபானத்தின் விலையைக் குறைக்குமாறு மதுவரி திணைக்களம் விடுத்த கோரிக்கையை மது உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
அதன்படி, மதுபானத்தின் விலை தற்போது எந்த ;வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டார்.