மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது

மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் ஹல்தும்முல்ல காவல் துறை இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹல்தும்முல்ல காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பதுளை – ஹல்தும்முல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருந்தில் உள்ள பயணிகளின் பயணத்தை கருத்தில் கொண்டு வேறொரு சாரதி மூலம் காவல் துறை செலுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தும்முல்ல காவல் துறை மேற்கொண்டு வருகின்றனர்.