மத வழிபாட்டுத்தலங்கள் பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ள மாட்டார்கள்!

ஆலயங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ள  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

ஆலயங்களினதும் ஏனைய வழிபாட்டுத்தலங்களினதும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்