தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் தனது இறுதிமூச்சு வரை குரல்கொடுத்த உயர்ந்த உன்னதமான மனிதர், மனிதநேயம் மிக்க சிங்கள நண்பர் கலாநிதி.விக்கிரமபாகு கருணாரட்ணவின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கலாநிதி.விக்கிரமபாகு கருணாரட்ணவின் மறைவு குறித்து வியாழக்கிழமை (25.07.2024) அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ்மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காகத் தமிழீழத் தமிழ்மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் மறைவுக்குத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினராகிய நாம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் இரங்கல் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.