மரத்தில் மோதிய ஜீப் ; ஒருவர் காயம்

தம்புள்ளை – பக்கமூன வீதியில் 14 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (13) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜீப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, ஜீப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.