மரை இறைச்சி, துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் மூவர் கைது!

மன்னார், மடு வீதி தேசிய பூங்காவில் மரை இறைச்சி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன்  மூன்று சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 42 கிலோ மரை இறைச்சி , துப்பாக்கி , தோட்டாக்கள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்டப்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் நீண்ட காலமாக மடு வீதி தேசிய பூங்காவில் விலங்குகளை வேட்டியாடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக  2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெராதம் விதிக்கப்பட்டுள்ளது.