மஸ்கெலிய மாணவர்கள் மூவரும் மட்டக்களப்பில் சிக்கினர்

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவர்களுடைய பெற்றோரால்  முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சாமிமலை 200 ஏக்கர் தோட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மனோஜ், சாமிமலை கொழும்பு தோட்டத்தை சேர்ந்த காலிமுத்து புலேந்திரன், சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்தை பிரிவைச் சேர்ந்த பி.துஷாந்தன் ஆகியோரே காணாமல் போயிருந்தனர். அவர்கள் மூவரும் 15 வயதுடையவர்கள்.

இவர்கள் மூவரும் நீராட சென்றபின்  வீடுகளுக்குத் திரும்ப வில்லை​யென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களை, தேடும் பணியை பெற்றோர்கள், உறவினர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அந்த மூவரும் மட்டக்களப்பு பகுதிக்கு வேலை தேடிக் கொண்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.    சிறுவர்களின் பெற்றோர்கள் மட்டக்களப்பு பகுதிக்கு சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.