மஹரகமவில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ய முயன்றவர் கைது

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்ய முயன்ற நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து பல போதைப்பொருட்கள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலை முயற்சியில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.