கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானது வெள்ளிக்கிழமை (26) காலை 9:30 மணி முதல் 24 மணி நேரத்திற்கு நீடித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காலி முதல் பொத்துவில் வரை (மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக) மற்றும் புத்தளம் முதல் காங்கேசன்துறை (மன்னார் வழியாக) வரையிலான கடல் பகுதிகள் கொந்தளிப்பான காணப்படும்.
இந்த கடல் பிராந்தியங்களில் மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த பகுதிகளிலுள்ள கடற்படையினர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள், சனிக்கிழமை (27) காலை 9:30 மணி வரை கவனமாக இருக்குமாறும் , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





