முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ; மகன் காயம்

அம்பாந்தோட்டை – வெல்லவாய பிரதான வீதியில் பல்லேமலல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

பல்லேமலல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணித்தாயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கர்ப்பிணித் தாய் தனது இரண்டரை வயது மகனுடன் வீதியில் சென்றுகொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டி ஒன்று  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, கர்ப்பிணித் தாயும் இரண்டரை வயது மகனும் காயமடைந்துள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணித் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.