முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்த சம்பவம் ஒன்று நேற்று (14) மாலை ஹிக்கடுவை பகுதியில் பதிவாகியுள்ளது.
T-56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகம் தவறியதால், சாரதிக்கும் தாக்குதல் நடாத்தியவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சாரதி தப்பியோடி மறைந்ததுடன், துப்பாக்கிதாரிகளும் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவ இடத்தில் டி-56 ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.