முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பயன்படுத்திய அரச வீடுகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கு அந்தந்த வீடுகளில் இருந்த சில பிரச்சனைகளே காரணம் என்றும், இதை விரைவில் தீர்க்குமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படாத வீடுகளை அடுத்த வாரம் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த சந்தர்ப்பங்களில், குறித்த வீட்டில் முன்னாள் அமைச்சர் அல்லது அவரது நெருங்கிய உறவினர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.