முன்னாள் கிரிக்கெட் வீரர் இசுரு உதானவின் உறவினரொருவருக்குச் சொந்தமான ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது, கொள்ளையர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இசுரு உதானவின் உறவினரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டிலிருந்த 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் நான்கு மாதங்கள் கடந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.