மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயம்

சம்மாந்துறை பொலிஸ் வீதியில் திங்கட்கிழமை (17) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, விபத்தின் போது வீட்டின் முன்னால் அமர்ந்து இருந்த சிறுவன் மீதும் மோட்டார் சைக்கிள் மோதியதுடன், அச்சிறுவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.