யானையை கண்டு அச்சமடைந்தவர் விபத்தில் பலி

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, அனுராதபுத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான , இராஜாங்கனை – சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் .

காட்டு யானையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,  அதனைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார் இதன்போது, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கர வண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது .

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்த கருவலகஸ்வெவ பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.