யாழில் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தொழில்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு

நுண்,சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு வெள்ளிக்கிழமை (01.08.2025) காலை யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நடைபெற்றது.

தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் விருத்தி விழிப்புணர்வுச் செயலமர்வு 50 தொழில் முயற்சியாளர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு நிகழ்வில் கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சமன் சிறிலால், பிரதம நிர்வாக அதிகாாி யூட் பெர்னான்டோ, கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சசிகதிமெல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.