யாழில் விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் , படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துன்னாலை வடக்கை சேர்ந்த நாகசார பாலச்சந்திரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானர்.

விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.